விழாவிற்கு இப்படியா வருவார் – ரசிகர்களை வியப்படைய வைத்த சாய் பல்லவி

பிரேமம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். #SaiPallavi

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.

இவர் தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கரு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருக்கிறார்கள். சாய் பல்லவி இதில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இவர் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பைக்கில் சென்றிருக்கிறார். கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட சாய்பல்லவி உடனே பைக்கில் போக திட்டமிட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் சென்றிருக்கிறார். எளிமையாக பைக்கில் வந்து இறங்கிய சாய்பல்லவியை கண்ட ரசிகர்கள் வியப்படைந்தனர்.

Related Post