செல்போனுக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை

ஐதராபாத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு அடிமையான மகனின் கையை கத்தியால் வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

செல்போனுக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை
ஐதராபாத்:

ஐதராபாத்தின் பகடி ஷரீப் பகுதியைச் சேர்ந்த முகமத் காயூம் குரேஷி அப்பகுதியில் கசாப்பு கடை வைத்துள்ளார். இவரின் மகன் காலித்(19) கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். காலித் தனது செல்போனில் அதிக அளவில் படங்கள் மற்றும் ஆபாச படங்கள் பார்த்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது காலித்தின் அருகில் வந்த முகமத் கத்தியினால் அவன் கையை வெட்டினார். காலித்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். #tamilnews

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முகமத் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். செல்போனிற்கு அடிமையான தனது மகனின் கையை தந்தை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post