வாழ்நாள் சாதனையாளரை விருது பெற்றார் மணிரத்னம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் மவுன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது, “செக்கச் சிவந்த வானம்” படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த் சாமி, சிம்பு, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பெங்களூருவில் சர்வதேச திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை இயக்குனர் மணிரத்னத்துக்கு கர்நாடக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, 2002-ம் ஆண்டில் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை பெற்றிருந்தார். இது மட்டுமல்லாமல், பல திரைப்பட விருதுகள் உள்பட ஆறு முறை தேசிய விருதையும் மணி ரத்னம் பெற்றிருக்கிறார்.

முன்னதாக, கன்னடத்தில் “பல்லவி அனுபல்லவி” என்ற படத்தை இயக்கி தனது சினிமா துறையை தொடங்கினார் என்பது குறிபிடத்தக்கது.

Related Post