500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்

தொலைக்காட்சி தொடராக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற ‘ராமாயணம்’ 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாக தயாரிக்க உ.பி. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவான ‘கஜினி’ இந்திப்படத்தை மது மன்ட்டேனா, அல்லு அரவிந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சினிமாத்துறை பாதுகாவலராக விளங்கும் ‘பிலிம் பந்து’ என்ற அமைப்புடன் இணைந்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாக தயாரிக்க உ.பி. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று செய்யப்பட்டது.

லக்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது நேற்று ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உ.பி. மாநில அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை முதன்மை செயலாளரும், ‘பிலிம் பந்து’ அமைப்பின் தலைவருமான அவனிஷ் குமார் அவாஸ்தி மற்றும் இந்த திரைப்படத்தை கூட்டாக தயாரிக்கவுள்ள மது மன்ட்டேனா, அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படம், நவீனகால தொழில்நுட்பங்களுடன் இந்திய இதிகாசமான ராமாயணத்தை அனைத்து தலைமுறையினருக்குமான ஒலி-ஒளி விருந்தாக அமையும் என மது மன்ட்டேனா குறிப்பிட்டுள்ளார்.
500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்

Related Post