மத்திய பிரதேச இடைத்தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு
போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தின் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில எந்திரங்கள் காலையில் சிறிது நேரம் வேலை செய்யவில்லை. மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 10 மணி நிலவரப்படி கொலாரஸ் தொகுதியில் 16 சதவீத வாக்குகளும், மங்காலியில் 17 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இடைத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 28-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Related Post