100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் – 44 பேர் பலி

பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் 100 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் இருந்த 44 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரு நாட்டில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் – 44 பேர் பலி
லிமா:

பெரு நாட்டின் ஒகோனா பகுதியில் உள்ள பானாமெரிகான நெடுஞ்சாலையில் நேற்று சுமார் 45 பயணிகளுடன் சென்ற பஸ், வளைவில் திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் உருண்டது.

100 அடி பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 44 பேர் பலியானதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் பசாமாயோ பகுதியில் லாரி – பஸ் மோதிய விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post