ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வாலிபர்

மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வாலிபர் கைது
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள டர்பே ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஒரு நபர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நேற்று பிளாட்பாரத்தில் நடந்து செல்கிறார். அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ஒரு நபர், திடீரென அந்தப் பெண்ணை இழுத்துப் பிடித்து முத்தமிடுகிறார். இதனால் மிரண்டு போன அந்த பெண், அந்த நபரை தள்ளிவிட்டு பின்னால் செல்கிறார்.

ஆனால், மானபங்கம் செய்த அந்த நபரோ, சர்வ சாதாரணமாக அந்த இடத்தைவிட்டு செல்கிறார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Post