புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர்.

தமிழக, கேரள கடலோர பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி ‘ஒகி’ புயல் கடுமையாக தாக்கியது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி இறந்தனர். பலருடைய நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமங்களில் வசித்துவரும் மக்கள் பலர்தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இயல்புநிலை இன்னமும் திரும்பாத நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட மீனவ மக்களின் துயர் போக்கும் விதமாக சில நிவாரண உதவிகனை செய்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.

Related Post