60 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான ஆக்சிஜன் நிறுவன உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு

கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான ஆக்சிஜன் நிறுவன உரிமையாளருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

60 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான ஆக்சிஜன் நிறுவன உரிமையாளருக்கு ஜாமீன் மறுப்பு
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் பலியாகின. இதற்கு காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறை என தெரியவந்தது. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் நிறுவனத்திற்கு பணம் கட்டாததால் ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்பட்டது.

குழந்தைகள் இறந்ததற்கு காரணமான அந்நிறுவன உரிமையாளர் மணீஷ் பண்டாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மணீஷ் பண்டாரி ஜாமீன் வேண்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரின் மனுவை நேற்று விசாரித்த நீதிபதி யஷ்வந்த வர்மா, மணீஷ் பண்டாரிக்கு ஜாமீன் வழங்க முடியாது என அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மணீஷிற்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும், அவர் விசாரணைக்கு கண்டிப்பாக தேவைப்படுவார் எனவும் நீதிபதி கூறினார்.

Related Post