10 ஆயிரம் கோடி சட்டவிரோத பரிவர்த்தனை – குஜராத் தொழிலதிபர் மீது சி.பி.ஐ.யில் புகார்

குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, சட்டவிரோதமாக 10 ஆயிரம் கோடி பரிமாற்றம் செய்ததாக சி.பி.ஐ.யில் பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரளித்துள்ளது.

10 ஆயிரம் கோடி சட்டவிரோத பரிவர்த்தனை – குஜராத் தொழிலதிபர் மீது சி.பி.ஐ.யில் புகார்
புதுடெல்லி:

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவ்விவகாரத்தில், நீரவ் மோடி அவரது மனைவி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post