குண்டர்கள் தாக்கி இறந்த தலித் மாணவர் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் நிதி

உ.பி.யின் அலகாபாத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.

குண்டர்கள் தாக்கி இறந்த தலித் மாணவர் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் நிதி வழங்க அகிலேஷ் வலியுறுத்தல்
லக்னோ:

உ.பி.யின் அலகாபாத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் உள்ள கெர்னல்கஞ்ச் பகுதியில்ன் கலிகா ஓட்டலில் சட்ட கல்லூரி மாணவர் திலீப் சரோஜ் சாப்பிடச் சென்றார். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சரோஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அலகாபாத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் என்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை சுட்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளும் மக்களை கொன்று வருகின்றனர்.

அலகாபாத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

மாநிலத்தில் பாஜக கடந்த 10 மாத காலமாக காட்டாட்சியை நடத்தி வருகிறது. குற்றச் செயல்களை குறைப்பதில் மாநில அரசு தோற்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

Related Post